வரிக்கொள்கைக்கு எதிராக மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கை - இன்று தீர்மானிக்கப்படும்!
அரசாங்கம் நடைமுறைப்படுத்தியுள்ள வரி கொள்ளைக்கு எதிராக மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொள்வது தொடர்பில் இன்று தீர்மானிக்கப்படவுள்ளது.
இது சம்பந்தமாக, தொழிற்சங்கத்தின் முக்கிய உறுப்பினர்கள் மற்றும் தொழிற்சங்க ஒன்றியம் விஷேட கலந்துரையாடல் ஒன்றை நடத்தவுள்ளது.
அதேசமயம், அதிபர் ரணிலுடன் கலந்துரையாடல் நடத்த திட்டமிட்டிருந்தாலும், இதுவரை இது தொடர்பில் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க கூறியுள்ளார்.
விரிவுரையாளர்கள் - பணிப்புறக்கணிப்பு
இதேவேளை, இன்று 16 ஆவது நாளாகவும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டம் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.
அரசின் வரிக் கொள்ளை தொடர்பில் உரிய தீர்வு வழங்கும் வரை தமது போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை என பல்லைக்கழக விரிவுரையாளர்கள் சங்க சம்மேளனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
