ஆளுங்கட்சி எம்.பியை அவமதித்த மொட்டுக்கட்சி உறுப்பினர் கைது
தேசிய மக்கள் சக்தியின் (NPP) களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நிலாந்தி கொட்டஹச்சியை (Nilanthi Kottahachchi) சமூக ஊடகங்களில் அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
களுத்துறை (Kalutara) - மில்லனிய பிரதேச சபையின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ரவீந்திர நம்முனி (Raveendra Nammuni) குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று (03) காலை அகுருவாதோட்ட - படகொடவில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது இவர் செய்யப்பட்டுள்ளார்.
முகநூலில் இழிவுபடுத்தும் பதிவு
முன்னாள் பிரதேச சபை உறுப்பினர், அண்மையில் தனது முகநூல் கணக்கில் நிலாந்தி கொட்டஹச்சியை இழிவுபடுத்தும் வகையில் பதிவொன்றை இட்டிருந்தார்.
பின்னர் குறித்த பதிவை அன்றைய தினமே நீக்கியிருந்த நிலையில் இன்றைய தினம் அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |