தமிழர்களுக்குத் தீர்வா... சிங்களத் தலைமைகளின் நிலைப்பாடு என்ன...
யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்கு தீர்வு எட்டப்படும் என மகிந்த ராஜபக்ச 2009ஆம் ஆண்டு சர்வதேசத்துக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றியிருந்தால் எவ்வித பிரச்சினையும் தற்போது ஏற்பட்டிருக்காது என லங்கா சமசமாஜ கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.
75ஆவது சுதந்திர தினத்துக்கு முன்னர் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என அதிபர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளமை வரவேற்கத்தக்கது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத தடைச் சட்டத்தினால் தமிழ் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்பட்டு, புதிய சட்டம் உருவாக்கப்பட்டிருந்தால், நாடு சர்வதேச மட்டத்தில் சிறந்த அங்கீகாரத்தை பெற்றிருக்கும்.
யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு அரசியலமைப்பின் ஊடாக தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும் என அப்போதைய அதிபர் மகிந்த ராஜபக்ச சர்வதேசத்துக்கு வாக்குறுதி வழங்கினார்.
யுத்தத்தில் அடைந்த வெற்றியை தொடர்ந்து அவர் இரண்டாவது முறை அதிபராக பதவி வகிப்பது தொடர்பில் அக்கறை செலுத்தினாரே தவிர சர்வதேசத்துக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்தவில்லை.
இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் தயாரிக்கப்பட்ட சர்வ கட்சித் தலைவர் குழு அறிக்கையின் பரிந்துரைகளை செயற்படுத்துவதிலும் அவர் கவனம் செலுத்தவில்லை. குறுகிய அரசியல் நோக்கத்துக்காக தமிழ் மக்களுக்கு வழங்கவேண்டிய நியாயமான தீர்வுகள் காலம் காலமாக தாமதப்படுத்தப்பட்டு வருகின்றமை முற்றிலும் தவறானதாகும்.
முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச வடக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது குறித்து அக்கறை கொள்ளவில்லை.பதவி வகித்த இரண்டரை வருட காலத்தில் ஒரு முறை கூட அவர் வடக்குக்கு விஜயம் செய்யவில்லை.
அதிபராக தெரிவுசெய்யப்படுபவர் பதவிக் காலத்தில் ஒட்டுமொத்த மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் என்றும் அவர் மேலும் தெரித்துள்ளார்.
இது பற்றிய விரிவான செய்திகளையும் மேலும் பல முக்கிய செய்திகளையும் தெரிந்து கொள்ள எமது மதிய நேர செய்திகளுடன் இணைந்திருங்கள்,
நல்லூர் கந்தசுவாமி கோவில் 6ஆம் நாள் மாலை திருவிழா
