மருந்து தட்டுப்பாட்டுக்கு விரைவில் தீர்வு - சுகாதார அமைச்சர் நம்பிக்கை
மருந்து தட்டுப்பாட்டுக்கு தீர்வு
இலங்கையில் ஓகஸ்ட் மாத இறுதிக்குள் மருந்து தட்டுப்பாடு தீர்க்கப்படும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகள் தீர்க்கப்பட்டு நாடு வழமைக்குத் திரும்பி வருவதாகவும் சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.
இலங்கை அண்மைக்காலமாக மருத்துவத்துறையில் பாரிய அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வந்துள்ள நிலையில் ,தற்போதய நிலவரப்படி எதிர் காலத்தில் மருந்து தட்டுப்பாடு தீர்க்கப்படும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல நம்பிக்கை வெளியிட்டுள்ளர்.
இக்கட்டான தருணத்தில் கிடைத்த மருந்து பொருட்கள்
இலங்கையில் உள்ள மருத்து தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் முகமாக ஜப்பான் அரசாங்கம் 1.5 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான மருந்துப் பொருட்களை நன்கொடையாக வழங்கியுள்ளது.
இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மிசுகோசி கிடேகி (Mizukoshi Hideaki) மற்றும் யுனிசேவ் (UNICEF) இன் இலங்கை பிரதிநிதியினால் இந்த மருந்து பொருட்கள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவிடம் கையளிக்கப்பட்டது.
இந்த இக்கட்டான தருணத்தில் ஜப்பான் அரசாங்கம் முதல் தொகுதி அத்தியாவசிய மருந்துகளை உரிய நேரத்தில் வழங்கியுள்ளதாக ஒரு ஜப்பானிய தூதுவர் கூறியுள்ளார்.
இந்த நிலையில் யுனிசெஃப் நிறுவனம், இலங்கைக்கு அவசர மருத்துவ உதவி கோரி சர்வதேச நாடுகளிடம் அண்மையில் உதவிக்கான கோரிக்கையை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)