நடைமுறையானது அர்ச்சுனா எம்.பிக்கு விதிக்கப்பட்ட தடை
இன்றைய நாடாளுமன்ற விவாதத்தின் போது நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் (Ramanathan Archchuna)உரையின் நேரடி ஒளிபரப்பு சபாநாயகரின் உத்தரவின்படி இடைநிறுத்தப்பட்டது.
அடுத்த 8 அமர்வு நாட்களில் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவினால் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும், கருத்துகள் மற்றும் உரைகளை நேரடியாக ஒலி,ஒளிபரப்பு செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த தடை உத்தரவானது, கடந்த மாதம் 19 ஆம் திகதி நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வில் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவினால் அறிவிக்கப்பட்டது.
இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம்
அதன்போது, அர்ச்சுனாவினால் நாடாளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் தொடர்ச்சியாக முன்வைக்கப்படும் வெறுப்புப் பேச்சுகள் மற்றும் விமர்சனங்களால் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்துக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும் சபாநாயகர் சுட்டிக்காட்டியிருந்தார்.
இதேவேளை, அர்ச்சுனாவின் வெறுப்பு பேச்சுக்களை ஹன்சார்ட் பதிவிலிருந்தும் நீக்குமாறு அவர் பணிப்புரை விடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
