விவசாயிகளுக்கு மகிழ்ச்சி செய்தி - வழங்கப்படும் விசேட சலுகை!
2023 ஆம் ஆண்டுக்கான கால போகத்தில் விவசாயிகள் விருப்பத்திற்கேற்ப உர வகைகளை கொள்வனவு செய்ய முடியும் என கூறப்பட்டுள்ளது.
இதற்கமைய, யூரியா உள்ளிட்ட உரங்களை கொள்வனவு செய்வதற்கு சந்தர்ப்பம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நெற்செய்கைக்காக விவசாயிகளுக்கு உரம் வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் இது வழங்கப்படும் என இன்றையதினம்(03) விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
மானியக் கொடுப்பனவு
உரம் கொள்வனவு செய்வதற்கு விவசாயிகளுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் மானியக் கொடுப்பனவுகளை தீர்மானித்தவாறு அனைத்து விவசாயிகளுக்கும் வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், உர கொள்வனவிற்காக 01 ஹெக்டேருக்கு 20,000 ரூபாயும், 02 ஹெக்டேருக்கு 40,000 ரூபாயும் மானியமாக வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஆகவே விவசாயிகள் தமது விருப்பதிற்கிற்கமைய யூரியா போன்ற உரங்களை கொள்வனவு செய்ய முடியும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
