இடம் மாறுகிறது சிறிலங்காவிற்கான அமெரிக்க தூதரகம்!
சிறிலங்காவிற்கான அமெரிக்க தூதரகத்தின் அலுவலகம் புதிய கட்டடத்திற்கு இடம் மாற்றம் செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய அமெரிக்க தூதரகம் அமைந்துள்ள பழைய கட்டடத்தில் இருந்து புதிய கட்டடத்திற்கு இன்றைய தினம் இடம்பெயரவுள்ளதாக அமெரிக்க தூதுவர் ஜூலி சுங் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தனது டுவிட்டர் பக்கத்தில் பழைய கட்டடத்தில் இருந்து புதிய கட்டடத்திற்கு பொருட்களை எடுத்துச் செல்லும் சில புகைப்படங்களையும் பதிவேற்றியுள்ளார்.
சிறிலங்கா அமெரிக்கா இடையேயான வரலாற்று தொடர்புடைய பதிவு
அமெரிக்கா சிறிலங்கா இடையிலான வரலாற்று தொடர்பு குறித்தும் அமெரிக்க தூதுவர் கருத்து வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் தெரிவித்திருப்பதாவது,
“பல தசாப்தங்கள் பழமையான எமது அலுவலகங்களில் இருந்தும், பல தசாப்தங்கள் பழமையான அமெரிக்க- சிறிலங்கா வரலாறு பொதிந்த எமது புதிய தூதரக அலுவலகத்திற்கு செல்ல ஆரம்பித்துள்ளோம்.
மாற்றத்திற்கு அனைவரும் கை கோர்த்த தருணம்
அதற்காக அனைவரும் கைகோர்த்துக்கொண்டோம். இது புதிய அனுபவமாக இருக்கும். விரைவில் எமது புதிய அலுவலத்திற்கு உங்களை வரவேற்க காத்திருக்கின்றோம்” என ஜூ சுங் பதிவிட்டுள்ளார்.

