அச்சுறுத்திய சிறிலங்கா இராணுவ அதிகாரி -கைது செய்தது காவல்துறை
மின்சார கட்டணம் செலுத்தப்படாத வீடொன்றில் மின்சாரத்தை துண்டிக்கச் சென்ற அதிகாரிகளை அச்சுறுத்திய குற்றச்சாட்டின் பேரில் சிறிலங்கா இராணுவத்தின் லெப்டினன்ட் கேணல் தர அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டதாக திவுலப்பிட்டியகாவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
கைது செய்யப்பட்டுள்ள நபர் பனல்வ சிறிலங்கா இராணுவ பீரங்கி படை முகாமில் கடமையாற்றும் லெப்டினன்ட் கேணல் ஆவார்.
செலுத்தப்படாத மின்கட்டணம்
திவுலப்பிட்டியில் உள்ள வீட்டில் மின்சாரக் கட்டணம் செலுத்தப்படாத காரணத்தால் திவுலப்பிட்டி மின் பொறியியல் அலுவலக அதிகாரிகள் மின்சாரத்தை துண்டிக்கச் சென்றுள்ளனர்.
மின்சாரத்தை துண்டிக்க
குறித்த குழுவினர் மின்சாரத்தை துண்டிக்க ஆயத்தமான போது, வீட்டின் உரிமையாளர் என கூறப்படும் லெப்டினன்ட் கேணல், மின்சார சபை ஊழியர்களை அச்சுறுத்தியதையடுத்து, குறித்த லெப்டினன்ட் கேணல் திவுலப்பிட்டி காவல் நிலையத்தினால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
