மீண்டும் அதிகரித்தது பாணின் விலை!!
Sri Lanka Economic Crisis
Sri Lankan Peoples
By Kanna
இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் பாணின் விலை அதிகரிக்கப்படவுள்ளது.
இதன்படி, 450 கிராம் நிறையுடைய பாண் ஒன்றின் விலை 20 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் இதனைத் தெரிவித்துள்ளது.
ஏனைய பேக்கரி உற்பத்திகளின் விலையும் அதிகரிப்பு
அத்தோடு ஏனைய பேக்கரி உற்பத்திகளின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்த சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியை தொடர்ந்து மக்கள் அன்றாடம் உபயோகிக்கும் பொருட்களின் விலைகள் அனைத்தும் அதிகரித்துள்ளமையால் மக்கள் பாரிய சிரமங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் தற்பொழுது பாணின் விலை மீண்டும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
