22 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்பு அவசியம் - சபாநாயகர் அறிவிப்பு
Mahinda Yapa Abeywardena
Sri Lanka
Sri Lanka Budget 2022
By pavan
சர்வஜன வாக்கெடுப்பு
22 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் அரசியலமைப்பிற்கு அமைவானதாக இருந்தாலும், சில சரத்துக்களை நிறைவேற்றுவதற்கு விசேட பெரும்பான்மையும் சர்வஜன வாக்கெடுப்பும் அவசியம் என உயர் நீதிமன்றம், நாடாளுமன்றத்திற்கு அறிவித்துள்ளது.
நாடாளுமன்றத்தின் இன்றைய அமர்வின்போது சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, உயர் நீதிமன்றத்தின் இந்த நிலைப்பாட்டினை அறிவித்தார்.
22 ஆவது திருச்சட்டமூலத்தில் அடங்கியுள்ள சில சரத்துக்கள் அரசியலமைப்புக்கு முரணானதாக உள்ளதென உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
அவற்றை நிறைவேற்றுவதற்கு சாதாரண பெரும்பான்மை அல்லது சர்வஜன வாக்கெடுப்பு வேண்டுமென உயர் நீதிமன்றம் தமது வியாக்கியானத்தில் அறிவித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
இது பற்றிய விரிவான செய்திகளையும் மேலும் பல முக்கிய செய்திகளையும் தெரிந்து கொள்ள எமது மாலை நேர பிரதான செய்திகளுடன் இணைந்திருங்கள்

