மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநரின் பயணத்தடை தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்!
இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ராலுக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத்தடை நீக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த அறிவிப்பு இன்று விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அஜித் நிவார்ட் கப்ரால் மீதான பயணத்தடையை நீட்டிக்குமாறு முறைப்பாட்டாளரின் சட்டத்தரணிகள் கோரவில்லை என்பதனால் பயணத்தடை காலாவதியானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தயாராகாத திருத்தப்பட்ட முறைப்பாடு
இந்நிலையில், திருத்தப்பட்ட முறைப்பாடு இன்னும் தயாராகாத நிலையில், அதனை தாக்கல் செய்வதற்கு கால அவகாசம் தேவை என மனுதாரர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதன்படி, திருத்தப்பட்ட முறைப்பாட்டை நவம்பர் 15 ஆம் திகதிக்கு முன்னர் தாக்கல் செய்யுமாறு கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே மனுதாரருக்கு உத்தரவிட்டுள்ளார்.
பிரதிவாதியின் சட்டத்தரணி முன்வைத்த அறிவிப்பு
இந்த வழக்கை தாக்கல் செய்வது தொடர்பில் தமக்கு பல ஆட்சேபனைகள் இருப்பதாகவும், திருத்தப்பட்ட முறைப்பாடு தாக்கல் செய்யப்பட்டவுடன் அதனை தாம் முன்வைப்பதாகவும் பிரதிவாதி தரப்பில் முன்னிலையான சட்டத்தரணி அறிவித்தார்.

