சிறிலங்கா தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தின் திட்டம் - சீனா வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!
இலங்கை, தற்போதைய சிரமத்திலிருந்து மீள, கடன் நிவாரணம் மற்றும் நிலையான அபிவிருத்தியை அடைவதில், இலங்கையின் பதிலளிப்புக்கு ஆதரவளிப்பதில், தொடர்ந்தும் சாதகமான பங்களிப்பை வழங்குமாறு சர்வதேச நிதி நிறுவனங்களுக்கு தாம் அழைப்பு விடுத்துள்ளதாக சீன தூதரகம் தெரிவித்துள்ளது.
அதுமட்டுமன்றி சீனாவுடன் இலங்கை தீவிரமாக செயல்படும் என்று நம்பும் அதேவேளை, சாத்தியமான தீர்வை விரைவாக உருவாக்கும் என்று நம்புவதாகவும் சீன தூதரகம் தெரிவித்துள்ளது.
சர்வதேச நிதி நிறுவனங்களை ஊக்குவிக்கும் சீனாவின் திட்டம்
இது தொடர்பில் சீன தூதரகம் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது.
தொடர்ந்தும் அந்த அறிக்கயைில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
சீனா, சர்வதேச நாணய நிதியத்தின் நெருங்கிய நண்பர், அண்டை நாடு மற்றும் முக்கிய பங்குதாரர் என்ற வகையில், இலங்கை தொடர்பில் தாம் எப்போதும் சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஏனைய சர்வதேச நிதி நிறுவனங்களை ஊக்குவித்து வருவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு உதவ தயார் நிலையை வெளிப்படுத்தியுள்ள நிறுவனங்கள்
மேலும் சிறிலங்கா அரசாங்கம் கடன் கொடுப்பனவுகளை இடைநிறுத்திய பின்னர், சீன நிதி நிறுவனங்கள் சீனா தொடர்பான முதிர்ந்த கடன்களைக் கையாள சரியான வழியைக் கண்டறிவதற்கும், தற்போதைய சிரமங்களைச் சமாளிக்க இலங்கைக்கு உதவுவதற்கும் தங்கள் தயார் நிலையை வெளிப்படுத்தியுள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.