ஜூலி சங் மஹிந்த இடையே இடம்பெற்ற முதலாவது சந்திப்பு!
சிறிலங்காவிற்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங், சிறிலங்கா நாடாளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை சந்தித்தார்.
இந்த சந்திப்பு இன்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூலி சங் சிறிலங்காவிற்கான அமெரிக்க தூதுவராக நியமிக்கப்பட்டதை அடுத்து சபாநாயகருடன் இடம்பெற்ற முதலாவது சந்திப்பு இதுவாகும்.
பொருளாதாரம்
இதன்போது, அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தி தற்போதைய பொருளாதார நெருக்கடியை வெற்றிகொள்ள புதிய பிரதமர் உள்ளிட்ட அரசாங்கத்தினால் முடியும் என தான் நம்புவதாகவும் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.
அதேபோன்று மக்கள் எதிர்பார்க்கும் அரசியல் மறுசீரமைப்புகளை மேற்கொண்டு ஜனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.
சிறிலங்கா – ஐக்கிய அமெரிக்க நாடாளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் ஊடாக இரு நாடுகளுக்குமிடையிலான உறவுகளை மேலும் மேம்படுத்த எதிர்பார்ப்பதாகவும் ஜூலி சங் தெரிவித்தார்.
பெண் பிரதிநிதித்துவம்
நாடாளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் மேற்கொள்ளும் பணிகளை பாராட்டிய அவர் நாடாளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கும் அவசியம் குறித்தும் கலந்துரையாடினார்.
இலங்கையில் ஜனநாயகத்தை வலுப்படுத்த ஐக்கிய அமெரிக்கா தொடர்ந்தும் வழங்கிவரும் பங்களிப்புக்குச் சபாநாயகர் தனது நன்றியைத் தெரிவித்தார்.
இந்த சந்திப்பில் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்கவும் கலந்துகொண்டிருந்தார்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் கொடியேற்றம் - 29.07.2025
