எமக்கு கோட்டாபயவும் வேண்டாம் ரணிலும் வேண்டாம்- வீதியில் டயர்களைக்கொழுத்தி மக்கள் போராட்டம்!
                                    
                    Colombo
                
                                                
                    Gotabaya Rajapaksa
                
                                                
                    Ranil Wickremesinghe
                
                                                
                    Sri Lanka
                
                                                
                    SL Protest
                
                        
        
            
                
                By Kalaimathy
            
            
                
                
            
        
    கொழும்பில் மக்கள் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பு - புதுக்கடை பகுதியிலேயே டயர்களை கொழுத்தி மக்கள் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
எரிவாயு வழங்கக் கோரியே வீதியை மறித்து நடு வீதியில் டயர்களை எரித்து போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் கூறுகையில்,
எமக்கு ரணிலும் வேண்டாம், சஜித்தும் வேண்டாம். புதுக்கடை மக்கள் அனைவரும் கோட்டா கோ கமவிற்கு செல்லவுள்ளோம்.
மக்கள் சாப்பிட இல்லாமல் இருக்கிறார்கள். 25 நாட்களாக எரிவாயு வரவில்லை. மண்ணெண்ணெயும் இல்லை. நாங்கள் என்ன செய்வது. உடனடியாக எங்களுக்கு தீர்வு வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளனர்.
 






 
                                        
                                                                                                                         
    
                                
            மரண அறிவித்தல்
        
        
            1ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            2ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
 
                 
                         
                         
                         
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        