நாட்டை மீட்க சிறிலங்கா கிரிக்கெட் சபை எடுத்த தீர்மானம்!
Sri Lanka Cricket
Sri Lanka Economic Crisis
Ministry of Health Sri Lanka
By Kanna
நாட்டின் சுகாதாரத்தை மீட்க சுகாதார துறைக்கு 2 மில்லியன் அமெரிக்க டொலர்களை நன்கொடையாக வழங்க சிறிலங்கா கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு சிறிலங்கா கிரிக்கட் சபை இதனைத் தெரிவித்துள்ளது.
குழந்தைகளுக்கான அத்தியாவசிய மருந்துகளை கொள்வனவு செய்வதற்காகவும் புற்றுநோயாளிகளின் சிகிச்சைக்காக மருந்துகளை கொள்வனவு செய்வதற்காகவும் குறித்த நன்கொடையை வழங்குவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, தேவையான தருணத்தில் இந்த நன்கொடையை வழங்குவதில் ஸ்ரீலங்கா கிரிக்கட் மிகவும் மகிழ்ச்சியடைகிறது, மேலும் இந்த சவாலான காலகட்டத்தை முறியடிக்க எமது தேசத்திற்கு எமது பூரண ஆதரவை வழங்குவோம் என சிறிலங்கா கிரிக்கெட்டின் தலைவர் ஷம்மி சில்வா தெரிவித்தார்.

மரண அறிவித்தல்