சிறிலங்கா தொடர்பான நடவடிக்கைக்கு ஜீ -7 மாநாட்டில் வரவேற்பு
Sri Lanka
Japan
India
France
By Vanan
சிறிலங்காவின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் இந்தியா, ஜப்பான் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் இணைத் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்துக்கு ஜீ-7 நாடுகளின் கூட்டணி வரவேற்பு தெரிவித்துள்ளது.
ஜப்பானின் ஹீரொஸிமா நகரில் நேற்று ஆரம்பமான ஜீ-7 நாடுகளின் தலைவர்களது 49ஆவது மாநாடு நாளை வரை இடம்பெறவுள்ளது.
சிறிலங்கா தொடர்பான நடவடிக்கை

இந்த நிலையில் ஜீ-7 நாடுகளின் கூட்டணி வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் சிறிலங்கா தொடர்பான நடவடிக்கைக்கு வரவேற்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த கூட்டணி நாடுகள் பிரான்ஸ், இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய இணைத் தலைமையின் கீழ் இடம்பெற்றசிறிலங்காவுக்கான கடன் வழங்குநர்கள் கூட்டத்தை நாங்கள் வரவேற்கிறோம்
கடனை நிவர்த்தி செய்வதற்கான எதிர்கால பலதரப்பு முயற்சிகளுக்கு முன்மாதிரியான தீர்மானத்தை எதிர்பார்க்கிறோம் என்று கூறியுள்ளன.
6ம் ஆண்டு நினைவஞ்சலி