இலங்கையில் கடன் மறுசீரமைப்பு - சீனா தீவிர பேச்சுவார்த்தை..!
இலங்கையில் கடன் மறுசீரமைப்பு தொடர்பாக தீவிரமாக பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தனது நிதி நிறுவனங்களுக்கு உதவுவதாக சீனா தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் கூறுகையில், இந்த விடயத்தில் சீனா உறுதியாகவும், தொடர்ச்சியாகவும் செயல்பட தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும் சீனாவின் யுனான் மாகாண ஆளுநர் வாங் யூபோ 5 நாள் பயணமாக கடந்த செவ்வாய் கிழமை இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.
வாங் யூபோ
இதன்போது,யுனான் மக்கள் தொகை 50 மில்லியன் எனவும் , மொத்த உள்நாட்டு உற்பத்தி 417 பில்லியன் அமெரிக்க டொலர் எனவும் எம் மக்களுக்கும் இலங்கைக்கும் நீண்டகால வரலாற்று நட்புறவு உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் கொழும்பு, கண்டி, பொலன்னறுவை, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய பகுதிகளுக்கு வாங் யூபோ விஜயம் செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.