இலங்கை போன்று படுகுழியில் வீழாமல் தப்பித்தோம்! பாகிஸ்தான் நிம்மதி பெருமூச்சு
படுகுழியில் வீழாமல் தப்பித்தோம்
கணிசமான கொள்கை மாற்றங்கள் மற்றும் சிக்கன நடவடிக்கைகள் காரணமாக இலங்கையை போன்றதொரு நிலைமை தமது நாட்டுக்கு தவிர்க்கப்பட்டதாக பாகிஸ்தானிய நிதியமைச்சர் மிஃப்தா இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு செய்திச் சேவை ஒன்றுக்கு வழங்கிய செவ்வியொன்றின்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
குறித்த செவ்வியில் மேலும் கருத்துரைத்துள்ள அவர்,
“எமது நாடு, இலங்கையின் பாதையில் செல்லப்போகிறது என்ற கவலை தற்போது தவிர்க்கப்பட்டுள்ளது. சில குறிப்பிடத்தக்க மாற்றங்களைச் செய்தமையால், அந்தச் சூழ்நிலை தடுக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் நிம்மதி பெருமூச்சு
எனவே தற்போது பாகிஸ்தான் இப்போது சரியான திசையில் செல்கிறது.
எரிசக்தி இறக்குமதியின் அதிக விலை காரணமாக பாகிஸ்தான் நெருக்கடியின் விளிம்பிற்கு தள்ளப்பட்டது. நாட்டின் வெளிநாட்டு நாணய கையிருப்பு 9.8 பில்லியன் டொலர்களாக குறைந்துள்ளது.
இது ஐந்து வார இறக்குமதிகளுக்கு போதுமானதாக இல்லை. இந்த ஆண்டு அமெரிக்க டொலருக்கு எதிராக பாகிஸ்தானிய ரூபாய் மிகக் குறைந்த அளவு வரை பலவீனமடைந்தது” என்றார்.
You May like this