இந்தியா போல் வளர இலங்கைக்கு ஆலோசனை
இலங்கையில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பொருளாதார திட்டம் 40 ஆண்டுகள் பழமையானவை என்பதால் அவை உடனடியாக மாற்றப்பட வேண்டுமென இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட வலியுறுத்தியுள்ளார்.
அரசாங்கம் வருமானங்களை ஈட்டக்கூடிய புதிய வழிகளை கண்டறிந்து கொள்ள வேண்டும் என்பதோடு அவற்றை நடைமுறைப்படுத்தவும் வேண்டுமென கொழும்பு ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் மிலிந்த மொரகொட தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு வருமானம்
மேலும் கருத்துக்களை பகிர்ந்த அவர், “இந்து சமுத்திரத்தில் இலங்கை ஒரு சிறந்த இடத்தில் இருந்தாலும் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது ஒரு சிறு நாடாக கருதப்படுவதால் உள்நாட்டு வருமானத்தின் மூலம் மாத்திரம் முன்னோக்கிச் செல்ல முடியாது.
கடந்த காலங்களில் இலங்கைக்கான வருமானத்தை ஈட்டக்கூடிய முக்கிய வளங்களில் அரசாங்கம் கவனம் செலுத்தியிருந்தாலும் சுதந்திரத்தின் பின்னர் கல்வி, சுகாதாரம் போன்ற துறைகளில் அதிக கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளது.
சுய அபிவிருத்தி நடவடிக்கை
இலங்கைக்கு தேவையான வருமானத்தை ஈட்டுவதில் கவனம் செலுத்தியதை விட செலவீனங்களை அதிகரிப்பதில் கடந்த காலங்களில் ஆட்சி செய்த அரசாங்கம் அதிக கவனம் செலுத்தியிருந்தது.
இந்தியா தனது அபிவிருத்தியை முன்னெடுப்பது போல் இலங்கையும் தனது அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்” என்றார்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 19 ஆம் நாள் திருவிழா
