எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கோரப்படும் கப்பம்- தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை!
போக்குவரத்து சேவையில் இருந்து விலகவுள்ளதாகத் தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த அறிவிப்பை அச்சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
க.பொ.த சாதாரண தர பரீட்சை நிறைவடைந்ததன் பின்னர் பேருந்து சேவையில் இருந்து விலகுவதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
ஏனெனில் சில எரிபொருள் நிரப்பு நிலையங்களின் ஊழியர்கள் பேருந்துகளுக்கு எரிபொருள் நிரப்புவதற்காக கப்பம் கோருவதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
அந்த வகையில், பேருந்து ஒன்றுக்கு 100 லீற்றர் எரிபொருள் வழங்குவதற்கு 1000 ரூபாய் கப்பம் கோருவதாக அவர் தெரிவித்தார்.
அதன்படி, முறையாக டீசல் வழங்க நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் சாதாரண தர பரீட்சைக்கு பின்னர் பேருந்து சேவையில் இருந்து விலக தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
