ரணில் தொடர்பில் எதிர்வு கூறலை வெளியிட்டுள்ள ரெட்டா!
சிறிலங்காவின் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச மற்றும் தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்க தொடர்பில் காலி போராட்டத்தின் முக்கிய நபர்களில் ஒருவர் கருத்துத் தெரிவித்துள்ளார்.
காலிமுகத் திடல் போராட்டத்தின் முக்கிய நபர்களில் ஒருவரான ரெட்டா, என்பவரே தனது முகநூல் பக்கத்தில் பதிவு இட்டுள்ளார்.
அந்த பதிவில் தெரிவித்திருப்பதாவது,
“பழையவனுக்கு நாட்டில் இருந்து தப்பிச் செல்ல முடிந்தது, ஆனால், இவனுக்கு நாட்டில் இருந்து தப்பிச் செல்லவும் முடியாது போகும்” என பிரபல சமூக ஊடக செயற்பாட்டாளரான ரெட்டா என்கி்ன்ற ரதிந்து சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
கோட்டாபய மற்றும் ரணில் தொடர்பில் விமர்சனம்
இந்த பதிவு தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கவிற்கான ஒரு எதிர்வுகூறலாகவும் அமைந்துள்ளது.
“புழையவனுக்கு நாட்டில் இருந்து தப்பிச் செல்ல முடியாது இவனுக்கு நாட்டில் இருந்து தப்பிச் செல்லவும் முடியாது போகும்” என்பதானது,
முகநூல் பதிவு
போராட்டங்கள் காரணமாக முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவுக்கு நாட்டில் இருந்து தப்பிச் செல்ல முடிந்தது ஆனால் தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கு அதுவும் முடியாமல் தான் போகும் என்பதான கருத்துப்பட தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.
அத்துடன், “அடக்குமுறையை நிறுத்து” எனவும் அவரது முகநூல் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

