“இரண்டே ஆண்டுகளில் தலைகீழாக மாறிய இலங்கை”
இரண்டே ஆண்டுகளில் இலங்கையின் பொருளாதாரம் தலைகீழாக மாறியதாக நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மாஸ்டர் சரத் பொன்சேகா தகவல் வெளியிட்டுள்ளார்.
முகப் புத்தகத்தில் அவர் வெளியிட்டுள்ள புள்ளி விபரங்களில் இந்த தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொருட்களின் விலைகள்
கடந்த 2019ஆம் ஆண்டு இலங்கையில் காணப்பட்ட பொருளாதார நிலை தற்போது படு பாதாளத்திற்குள் விழுந்துள்ளது. அதற்கமைய, 2019 பாண் 50 ரூபாயில் காணப்பட்டது. ஆனால் தற்போது 180 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
2019ஆம் ஆண்டில் எரிவாயு சிலிண்டனர் ஒன்று 1350 ரூபாய், ஒரு மூட்டை சீமெந்து 850 ரூபாய், ஒரு லீட்டர் டீசல் 120 ரூபாய், ஒரு லீட்டர் பெட்ரோல் 140 ரூபாய், குறைந்தபட்ச பேருந்து கட்டணம் 12 ரூபாய்க்கு காணப்பட்டது.
யார் பொறுப்பு
முச்சக்கர வண்டியின் முதல் கிலோ மீற்றர் கட்டணம் 50 ரூபாய்க்கு காணப்பட்டது. 2019ஆம் ஆண்டு ஒரு பக்கட் பால் 30 ரூபாவுக்கும், 400 கிராம் பால் மா பக்கட் 320 ரூபாவுக்கும், பருப்பு ஒரு கிலோ கிராம் 115 ரூபாய்க்கு, அரிசி ஒரு கிலோ கிராம் 100 ரூபாய்க்கும் காணப்பட்டது.
அப்படி என்றால் இது 74 வருட பிரச்சினை அல்ல. 2019ஆம் ஆண்டு ஊடகத்தில் பிரபல கதாபாத்திரமாக இருந்தவருக்கு அடையாளமிட்டதன் முட்டாள் தனத்தினால் ஏற்பட்ட ஒரு பிரச்சினையாகும்” என அவர் தனது பதிவில் பதிவிட்டுள்ளார்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் கொடியேற்றம் - 29.07.2025
