தலைவர் பிரபாகரனுக்கு பின் சிறந்த தலைமைத்துவம் தமிழர்களிடையே இல்லை : சிறீதரன் வெளிப்படை
தலைவர் பிரபாகரனுடைய ஆளுமையான பார்வையும் நிதர்சனமான அவருடைய வார்த்தைகளும் ஏனைய அரசியல் தலைவர்களையும் ஒரு கட்டுக்குள் வைத்திருந்தது அது ஒரு நல்ல தலைமைத்துவத்தை தந்திருந்தது.ஆனால் 2009 ற்கு பின்னர் எம்மிடையே சிதறல்கள் ஏற்படத் தொடங்கிவிட்டன.
இவ்வாறு மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட சிறீதரன் தெரிவித்தார். ஐபிசி தமிழ் அகளங்கம் நிகழ்ச்சிக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தல் மூலம் யாழ்ப்பாணத்தில் தமிழ் தேசியம் என்பது இழக்கப்படவில்லை. அது இருக்கிறது.வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம் மற்றும் வன்னி தேர்தல் தொகுதியில் தமிழரசுக்கட்சியினுடைய வாக்கு வங்கி குறைவடையவில்லை.
ஆனால் ஆசனங்கள் குறைவடைந்துள்ளன.இவ்வாறு ஆசனங்கள் குறைவடைய காரணம் கடந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழரசுக்கட்சி எடுத்த தவறான முடிவுகள் தான்.
நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் இலங்கை தமிழரசுக்கட்சிக்கு ஏற்பட்ட பின்னடைவு மற்றும் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் அவர் தெரிவித்த விடயங்கள் காணொளியில்...
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |