மகிந்தவால் தாக்கப்பட்டாரா சங்ககார- உண்மையை வெளிப்படுத்தி டுவிட்!
முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச தாக்கியதன் காரணமாகவே இலங்கை கிரிக்கெட் அணியின் முனனாள் தலைவர் குமார் சங்ககார கிரிக்கெட் விளையாட்டில் இருந்து ஓய்வுபெற்றதாக சமூக வலைத்தளங்களில் பதிவு ஒன்று பகிரப்பட்டு வருகிறது.
பகிரப்பட்டு வரும் தகவல் முற்றிலும் பொய்யானது என சங்ககார தனது டுவிட்டரில் பதிவில் தெரிவித்துள்ளார்.
“வெளியாகியுளள் கதை உண்மையா என்று கேட்டவர்களுக்கும் ஆச்சரியப்படுபவர்களுக்கும் - இது முற்றிலும் தவறானது.” என சங்ககார கூறியுள்ளார்.
சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் சிங்கள மொழியிலான அந்த பதிவில், “நட்த்திர கிரிக்கெட் வீரர் சங்ககார தனது விலகல் பற்றி முதல் முறையாக தகவல் வெளியிட்டுள்ளார்.
மகிந்த தாக்கியதால் நான் விலகினேன். சங்கா வெளியிட்டுள்ளார்” என தெரிவிககப்பட்டுள்ளது.
For all those who have asked and are wondering if the below story is true - it’s completely false. pic.twitter.com/9SzcEvfv41
— Kumar Sangakkara (@KumarSanga2) May 30, 2022
