வடக்கு கிழக்கிற்கு சாதகமாகும் இலங்கை - இந்திய தரைவழி இணைப்பு
Mano Ganeshan
India
Eastern Province
Northern Province of Sri Lanka
By Vanan
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான தரைவழிப்பால இணைப்பினை வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் சாதகமான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா அதிபரின் இந்திய பயணத்தின் போது இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான தரைவழிப்பால இணைப்புக் குறித்த பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில் பொருளாதாரத்தில் முன்னேற்றமடையும் தமிழகத்துடனான அதிக தொடர்பை வடமாகாணம் கொண்டுள்ளதாகவும் இதனை உரிய முறையில் பயன்படுத்த வேண்டும் எனவும் மனோ கணேசன் கூறியுள்ளார்.
ஐபிசி தமிழின் சக்கரவியூகம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி