இந்திய - இலங்கை கப்பல் சேவை - வெளியான மகிழ்ச்சி தகவல்
Sri Lanka
India
By pavan
இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான கப்பல் போக்குவரத்து சேவையானது விரைவில் ஆரம்பிக்கப்படும் என யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை உயர்ஸ்தானிகர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த திட்டத்தை ஆரம்பிப்பதற்க்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சென்னைக்கும் - யாழ்ப்பாணத்துக்கும் இடையில், அலையன்ஸ் எயார் மூலம் இயக்கப்படும் 100ஆவது விமானச் சேவைக்கான நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இந்திய இலங்கை தொடர்பு
இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே தொடர்பினை பேணுவதற்கு இந்த போக்குவரத்து மிக முக்கியமானதாகும்.
அந்த போக்குவரத்தை மேம்படுத்த, இருநாட்டு அரசாங்கங்களும் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக, அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்