காவல்துறை இராஜ்ஜியமாகும் சிறிலங்கா..!
இலங்கையை காவல்துறை இராஜ்ஜியமாக மாற்றுவதற்கான அரசியல் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக 43 ஆம் படையணி குற்றஞ்சாட்டியுள்ளது.
கொழும்பு பல்கலைக்கழகத்துக்கு விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டு கலகத்தடுப்பு பிரவினர் குறித்த பகுதியில் வரிசைப் படுத்தப்பட்டுள்ள நிலையிலேயே, இன்று நடைபெற்ற ஊடகசந்திப்பில் படையணியின் சட்டத்தரணி ஷிரால் அத்திலக இதனை தெரிவித்துள்ளார்.
கொழும்பு பல்கலைக்கழக வளாகத்தை சுற்றி சிறிலங்கா காவல்துறையினர் மற்றும் இராணுவத்தினர் வரிசைப்படுத்தப்பட்டுள்ளனர்.
நிலையற்ற தன்மை
சிறிலங்கா அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையின் மூலம், நாட்டின் அரசியலில் இருக்கும் நிலையற்ற தன்மை வெளிக்காட்டப்பட்டுள்ளது.
இலங்கை ஒரு காவல்துறை ராஜ்ஜியமாக மாற தற்போதைய சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அவரது அரசாங்கத்தின் நிலையற்ற தன்மை முதன்மையான காரணியாக விளங்குகிறது.
தமது அரசியல் பயணத்தில் பலவீனமடைந்துள்ள அரசியல் கட்சிகள் முன்னெடுக்கும் நடவடிக்கைகளை தற்போது ரணில் ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் முன்னெடுக்கிறது.
மக்களின் கருத்து சுதந்திரம் வன்முறையினூடாக அடக்கப்படுகிறது. சிறிலங்கா அரசாங்கத்தின் உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டம், அவசர நிலை பிரகடனம் போன்ற விடயங்களின் நடைமுறையால் அரசாங்கம் வன்முறையை கட்டவிழ்த்து விடுகிறது.
எந்தவொரு தலைவராலும் ஏகாதிபதியாக முடியும். எனினும், அதன் விளைவுகளை அவர்கள் அறிந்து கொள்ள வேண்டும். இலங்கையின் பொருளாதாரம் மற்றும் அரசியல் ஜனநாயகப்படுத்தப்பட வேண்டும்.
மக்கள் போராட்டங்களை
அடக்குவதன் மூலம் நாட்டில் அரசியல் நிலை தன்மையை அடைய
முடியாதென்பதை சிறிலங்கா அரசாங்கம் நினைவில் கொள்ள
வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
