திடீரென முன்னேற்றமடைந்த சிறிலங்கா..! வெளிநாட்டு நிபுணர் வெளியிட்ட அறிக்கை
Ranil Wickremesinghe
Sri Lanka Economic Crisis
Sri Lanka
Economy of Sri Lanka
By pavan
உலக பணவீக்க பட்டியலில் மூன்றாம் இடத்தில் இருந்த இலங்கை தற்போது 5ஆம் இடத்தைப் பிடித்துள்ளது.
ஜோன் ஹோப்கின்ஸ் பல்கலைக்கழக பொருளாதார நிபுணர் ஸ்டீவ் ஹென்கேயின் அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
உலகிலேயே அதிக பணவீக்கம் உள்ள நாடாக ஜிம்பாப்வே கருதப்படுகிறது. அதைத் தொடர்ந்து கியூபா, வெனிசுலா, துருக்கி காணப்படுவதோடு இலங்கை ஐந்தாவது இடத்திலும் உள்ளது.
இலங்கையின் வளர்ச்சி
இதற்கு முன்னர் பணவீக்கம் அதிகம் உள்ள பட்டியலில் முதலாம், மூன்றாம் இடங்களில் இருந்த இலங்கை தற்போது 5ஆம் இடத்தை நோக்கி வளர்ச்சியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
விரைவில் இலங்கையின் பணவீ்க்கத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும் என மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க அண்மையில் தெரிவித்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

