யாழில் வங்கி ஊழியர்கள் நடத்திய விசித்திர போராட்டம்!
யாழில் இலங்கை வங்கி கிளை ஊழியர்கள் விசித்திர போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்நதனர்.
இன்றை தினம் மதியம் இந்த போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியிலுள்ள இலங்கை வங்கிக் கிளைக்கு முன்பாக ஒன்றுகூடிய வங்கி ஊழியர்கள் பதாகைகளை தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
மக்கள் பணத்தை முறைகேடாக பயன்படுத்தும் தலைவர்
மதியம் 1.20 மணியிலிருந்து 1.21 வரையான ஒரு நிமிட போராட்டத்தை முன்னெடுத்து, பின்னர் கலைந்து சென்றனர்.
இந்த ஒரு நிமிட போராட்டத்தின் போது, இலங்கை வங்கித் தலைவர் மக்கள் பணத்தை முறைகேடாக பயன்படுத்துகின்றார்.
“சட்டம் எங்கே?, பொதுமக்கள் பணத்தை பாதுகாக்குக, இலங்கை வங்கித் தலைவரின் மோசடிகரமான கொடுக்கல் வாங்கல்களை வெளிப்படுத்துக, இலங்கை வங்கித் தலைவரின் மோசடிகரமான கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பான விசாரணைக்காக தடயவியல் கணக்காய்வொன்றை ஆரம்பிக்குக”
போன்ற வாசகங்கள் பதாகைகளை வங்கி ஊழியர்கள் தாங்கியிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

