இலங்கை பூராகவும் இன்று முதல் சமையல் எரிவாயு விநியோகம்
Litro Gas
Litro Gas Price
By pavan
விநியோகம் ஆரம்பம்
இலங்கை பூராகவும் இன்று (13) முதல் சமையல் எரிவாயுவை விநியோகிக்க ஆரம்பித்துள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில், 55,000 எரிவாயு கொள்கலன்கள் விநியோகிக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிட்ட அவர் நேற்று(12) இலங்கை வந்தடைந்த 3,700 மெட்ரிக் தொன் எரிவாயுவை கப்பலிருந்து இறக்கும் பணி இன்று(13) ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் கூறியுள்ளார்.
இதற்கிடையில் அதிக விலைக்கு கறுப்பு சந்தையில் எரிவாயு கொள்வனவு செய்வதை தவிர்க்குமாறு லிட்ரோ நிறுவனம் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
