சீனாவிற்கு குரங்கு ஏற்றுமதி - இன்றையதினம் நடந்த மனு மீதான விசாரணை
Sri Lanka
Government Of Sri Lanka
China
By Pakirathan
இலங்கையின் டோக் இன குரங்குகளை சீனாவுக்கு ஏற்றுமதி செய்ய எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப் போவதில்லையென உறுதியளிக்கப்பட்டுள்ளது.
இதனை, வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் கூறியுள்ளது.
இந்த குரங்கு ஏற்றுமதி நடவடிக்ககைளுக்கு எதிரான மனுத் தாக்கல்கள் இன்றையதினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
அறிவிப்பு
இதன்போது, வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் வழங்கிய அறிவிப்பினை சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
