பெண் ஒருவர் கொடூரமான முறையில் படுகொலை
வெலிமடை பகுதியில் பெண் ஒருவர் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
படுகொலை செய்யப்பட்ட பெண் புரங்வெல பிரதேசத்தை சேர்ந்த 54 வயதுடையவர் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
பெண் ஒருவர் காணாமல் போனமை தொடர்பில் அவரது மகள் வெலிமடை னபசவ்துறையில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.
பாழடைந்த கிணற்றில் வீசப்பட்ட சமலம்
இந்நிலையில், அப்பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றிற்கு அருகில் உள்ள பாழடைந்த கிணற்றில் போர்வையில் சுற்றப்பட்டு வீசப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது, உயிரிழந்த பெண் வேறு ஒருவருடன் இணைந்து ஹோட்டல் ஒன்றினை நடத்தி வந்ததாகவும், அந்த நபருடன் தகாத தொடர்பு வைத்திருந்ததும் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்
அந்த நபருடன் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக குறித்த பெண்ணை கொலை செய்துள்ளமையும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
விசாரணையையடுத்து, தலவாக்கலை பிரதேசத்தை சேர்ந்த 37 வயதான நபர் ஒருவர், பெண்ணை கொலை செய்த சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)