நாட்டில் வெங்காயத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

Onion India Economy of Sri Lanka
By Thulsi Nov 20, 2024 07:41 AM GMT
Report

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பெரிய வெங்காயத்தின் விலை திடீரென அதிகரித்துள்ளதாக தம்புள்ளை பொருளாதார மத்திய வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது.

ஒரு கிலோ உள்நாட்டு பெரிய வெங்காயத்தின் மொத்த விலை 400 ரூபாவாகவும் ஒரு கிலோ வெளிநாட்டு வெங்காயத்தின் மொத்த விலை 370 ரூபாவாகவும் அதிகரித்துள்ளது. 

இதன்படி இன்று (20) காலை தம்புள்ளை (Dambulla) பொருளாதார நிலையத்தில் ஒரு கிலோ உள்நாட்டு பெரிய வெங்காயத்தின் மொத்த விலை 380 - 400 ரூபாவாக இருந்ததாக வர்த்தகர்கள் சுட்டிக்காட்டினர்.

தங்கவிலையில் ஏற்பட்ட அதிரடி மாற்றம் : வாங்கவுள்ளோருக்கு முக்கிய அறிவித்தல்

தங்கவிலையில் ஏற்பட்ட அதிரடி மாற்றம் : வாங்கவுள்ளோருக்கு முக்கிய அறிவித்தல்

வெங்காயத்தை மறைத்து வைத்து விலை ஏற்றம்

இந்தியா (India), பாகிஸ்தான், தூத்துக்குடி, ஈரான் உள்ளிட்ட பல நாடுகளிலிருந்து பெரிய வெங்காயம் இறக்குமதி செய்வது மட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பெரிய வெங்காயத்தின் விலை ஒரேயடியாக அதிகரித்துள்ளதாக வர்த்தகர்கள் குறிப்பிட்டுள்ளனர்

நாட்டில் வெங்காயத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் | Sri Lanka Onions Prices Increase Today

மிகக் குறைந்த எண்ணிக்கையிலான விவசாயிகள் இந்த விலை உயர்வைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட போதிலும், கடந்த காலங்களில் உள்நாட்டு பெரிய வெங்காயத்தை விவசாயிகளிடம் இருந்து மிகக் குறைந்த விலைக்கு வாங்கிய வணிகர்கள் வெங்காயத்தை மறைத்து வைத்து விலை ஏற்றம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த வாஸ்கோடகாமா சொகுசு கப்பல்!

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த வாஸ்கோடகாமா சொகுசு கப்பல்!

தொடர் மழைவீழ்ச்சி

நாட்டில் வெங்காயத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் | Sri Lanka Onions Prices Increase Today

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலைய வர்த்தக சங்கத்தின் தலைவர் சி.எஸ்.சிறிவர்தன தொடர் மழைவீழ்ச்சி காரணமாக தரமான வெங்காயம் கிடைக்காமையினால் தரமான வெங்காயத்திற்கான கேள்வி அதிகரித்துள்ளதாக தெரிவித்தார்.

எதிர்காலத்தில் ஓரளவிற்கு விலை அதிகரிக்கலாம் எனவும், எனினும் அடுத்த ஒரு மாதத்தில் அதிகளவிலான பெரிய வெங்காயம் வெளிநாடுகளிலிருந்து ஓடர் செய்யப்பட்டுள்ளதாகவும், அவை கிடைக்கும் போது விலை குறையும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

டொலர் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்

டொலர் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

கொக்குவில், Duisburg, Germany

24 Oct, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

21 Oct, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, சென்னை, India, London, United Kingdom

20 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bristol, United Kingdom

12 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, யாழ்ப்பாணம், நுணாவில் மேற்கு, Wellawatte

21 Oct, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கந்தரோடை

04 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அச்சுவேலி

12 Nov, 2016
21ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, மீசாலை

24 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், கொழும்பு, Toronto, Canada

20 Oct, 2026