பரபரப்புக்கு மத்தியில் சிறிலங்கா நாடாளுமன்றம்..! வரவு - செலவுத் திட்ட வாக்கெடுப்பு நிறைவு
Parliament of Sri Lanka
Ranil Wickremesinghe
Sri Lanka
Sri Lanka Budget 2022
By Kalaimathy
சிறிலங்கா நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இடைக்கால வரவு செலவுத் திட்டத்தின் மீதான மூன்றாவது நாள் விவாதம் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.
இந்நிலையில், இன்றைய 3ஆம் நாள் விவாதத்தைத் தொடர்ந்து, இன்று மாலை வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றில் சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவினால் கடந்த 30ஆம் திகதி இடைக்கால வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து, அது தொடர்பிலான விவாதம் கடந்த 31ஆம் திகதி ஆரம்பமாகி இன்று வரையில் நடைபெறுகின்றது.
இந்நிலையிலேயே வரவு செலவுத்திட்டம் மீதான வாக்கெடுப்பு இன்று மாலை இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்