கோபா குழுவிலிருந்து திடீரென விலகிய சாணக்கியன் - நியமிக்கப்பட்ட புதியவர்! நேரலை
Parliament of Sri Lanka
S. Sritharan
Shanakiyan Rasamanickam
Sri Lanka
By Kalaimathy
சிறிலங்கா நாடாளுமன்றில் நியமிக்கப்பட்டுள்ள அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவிலிருந்து தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் விலகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சபாநாயகரின் இந்த அறிவித்தலை பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ச இன்று நடைபெற்றுக்கொண்டிருக்கம் நாடாளுமன்ற அமர்வில் அறிவித்தார்.
அதற்கமைய அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவிலிருந்து (கோபா) நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் விலகியுள்ளார்.
இதனையடுத்து, அவரது வெற்றிடத்துக்கு, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதி சபாநாயகர் அறிவித்துள்ளார்.
