மீண்டும் காவுவாங்கியது எரிபொருள் வரிசை! பெட்ரோலுக்கு காத்திருந்த நபர் பலி
Sri Lanka Police
Petrol diesel price
Death
By pavan
எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகாமையில் வரிசையில் காத்திருந்து விட்டு பின்னர் வீடு திரும்பிக் கொண்டிருந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சிலாபம் - ரம்பேபிட்டி பகுதியைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார், எனவும் இவரது சடலம் முன்னேஸ்வரம் வீதியில் உள்ள கால்வாயில் இருந்து இன்று முற்பகல் மீட்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
பெட்ரோல் இன்மையால் உந்துருளியின் எரிபொருள் தாங்கியை துவிச்சக்கர வண்டியில் வைத்து கொண்டு அவர் சிலாபம் ஐ ஓ சி எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு பிரவேசித்த இவர் வரிசையில் காத்திருந்து பின்னர் வீடு திரும்பிக் கொண்டிருந்த வேளை உயிரிழந்துள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில் அவரது சடலம் மீட்கப்பட்ட இடத்தில் குறித்த துவிச்சக்கர வண்டி இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
