யாழில் ஹெரோயின் போதைப் பொருளுடன் இளைஞன் கைது!
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
By pavan
அச்சுவேலி பத்தமேனி பகுதியில் ஹெரோயின் உயிர் கொல்லி போதைப் பொருளுடன் இளைஞன் ஒருவர் நேற்று (23) இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக அச்சுவேலி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இளைஞன் அதே பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய குடும்பஸ்தர் என தெரியவந்துள்ளது.
இந்த நபர் ஏற்கனவே ஹெரோயின் போதை பொருள் மற்றும் கஞ்சா போதை பொருளுக்கு அடிமையானவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட நபர்
அத்துடன் வீட்டில் உள்ள பொருட்களை விற்று, போதைப்பொருள் வாங்கும் பழக்கத்தினை வழக்கமாகக் கொண்டுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து 40 மில்லி கிராம் ஹெரோயின், தேசிக்காய், மற்றும் சிறின்ஸ் என்பன கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


புத்திர சோகத்தில் ஈழ அன்னையர்கள்... இன்று அன்னையர் தினம்…
2 நாட்கள் முன்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி