சீனாவிற்கு எதிராக போராட்டம் - கடும் நடவடிக்கைக்குத் தயாராகும் ஐ.தே.க
சீன நாட்டின் செயற்பாட்டிற்கெதிராக போராட்டம் ஒன்றை ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் ஒருவர் மேற்கொண்டுள்ளார்.
கொழும்பில் உள்ள சீனத் தூதரகத்திற்கு முன்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் உள்ளூராட்சி சபை உறுப்பினர் சஸி ஹெட்டியாராச்சியே இவ்வாறு போராட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
மேலும், இலங்கையின் கடனை சீனா மறுசீரமைக்க வேண்டும் என கோரியே இவ்வாறு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தார்.
இராஜதந்திரத்தில் நம்பிக்கை
இதன்போது இவரின் செயற்பாட்டை கண்டித்து நடவடிக்கை எடுக்கவுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.
மேலும், “இப்போராட்டத்திற்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை, தங்கள் கட்சி இராஜதந்திரத்தில் நம்பிக்கை கொண்டுள்ளது.
அத்தோடு அரசாங்கம் சீனாவுடனான கடன் விவகாரங்களை இராஜதந்திர உறவுகளின் மூலம் தீர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
கடன் மறுசீரமைப்பு என்பது நிதி அமைச்சரின் பிரச்சினையே தவிர பிரதேச சபை உறுப்பினரின் பிரச்சினை அல்ல, பிரதேச சபை உறுப்பினர் இவ்வாறான விடயங்களை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து கட்சி விரைவில் தீர்மானிக்கும்”
என்றும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 6ஆம் நாள் மாலை திருவிழா
