நானும் வருகின்றேன்..! மகிந்தவுக்கு சஜித் விடுத்துள்ள சவால்
தோற்கடிக்கப்பட்ட மொட்டு திருட்டுத் தரப்பு, தற்போதைய அதிபரால் நிர்மாணிக்கப்பட்ட தொங்கு பாலத்தின் மூலம் இன்று மீண்டும் எழுந்து நிற்க முயற்சிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
பொதுவாக நாட்டு மக்கள் அதிபர் ஒருவரை தேர்வு செய்வது நாட்டை கட்டியெழுப்பவதற்கு குறித்த அதிபர் முன்வைக்கும் வேலைத்திட்டத்தின் அடிப்படையிலேயாகும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
பொல்கஹவெலயில் நடைபெற்ற கூட்டமொன்றின் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
விரைவில் நானும் வருவேன்
சாம்பலை துடைத்து எழுச்சி பெற நினைக்கும் மொட்டுவினர் நாவலப்பிட்டியில் கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளனர்.
விரைவில் நானும் நாவலப்பிட்டியவுக்கு வருவேன். மக்கள் யார் பக்கம் என்பதை உலகுக்கு எடுத்துக்காட்டுவேன் எனவும் குறிப்பிட்டார்.
இது தொடர்பான மேலதிக தகவல்களுடன் வருகிறது இன்றைய மதிய நேர செய்திகளின் தொகுப்பு,
