மாலைதீவில் அதிபர் இல்லத்தை முற்றுகையிட்ட மக்கள்! கைது செய்யும் நடவடிக்கையில் காவல்துறையினர்
Gotabaya Rajapaksa
Sri Lanka
Sri Lankan Peoples
SL Protest
President of Sri lanka
By Kalaimathy
இரண்டாம் இணைப்பு
மாலைதீவில் கோட்டாபயவுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் மாலைதீவு காவல்துறையினர் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மாலைதீவில் இருந்து கோட்டாபயவை உடனடியாக வெளியேற்றுமாறு கோரி மாலைதீவு அதிபர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
(5.30 PM)
முதலாம் இணைப்பு
சிறிலங்கா அதிபர் கோட்டாபய ராஜபக்சவை நாடு கடத்தக்கோரி மாலைதீவிலும் போராட்டம் இடம்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை நாட்டை விட்டு வெளியேறிச் சென்று மாலைதீவில் தஞ்சமடைந்துள்ளார்.
இந்நிலையில், மாலைதீவில் இருந்து அவரை வெளியேற்றுமாறு கோரி மக்கள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
இதேவேளை கோட்டாபய மாலை தீவிலிருந்து சிங்கபூர் செல்லவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.




