சிறிலங்காவின் புதிய அதிபர் தெரிவு தொடர்பில் தற்போது வெளியாகியுள்ள முக்கிய அறிவிப்பு!
Gotabaya Rajapaksa
Mahinda Yapa Abeywardena
Sri Lanka
SL Protest
By Kalaimathy
சிறிலங்கா அரச அதிபர் தற்போது நாட்டை விட்டு வெளியேறியுள்ள நிலையில், அவர் தனது பதவி விலகல் கடிதத்தை கையளிப்பார் என சிறிலங்கா நாடாளுமன்ற சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில், போட்டாபய இன்றைய தினத்திற்குள் தனது பதவி விலகல் கடிதத்தை அனுப்பி வைப்பார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, எதிர்வரும் 20 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் புதிய அரச அதிபர் தெரிவு செய்யப்படுவார் எனவும் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
நாட்டில் கடந்த 9 ஆம் திகதி மாபெரும் மக்கள் எழுச்சிப் போராட்டம் இடம்பெற்ற நிலையில், அரச தலைவர் மாளிகை அரச தலைவர் செயலகம் என்பன முற்றுகையிடப்பட்டு போராட்டக்காரர்களால் முற்றுகையிடப்பட்டது.
அதனையடுத்து கோட்டாபய தற்போது நாட்டை விட்டு வெளியேறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
