சிறிலங்காவில் நீதி இல்லை - ஐரோப்பிய ஒன்றியத்தில் முறைப்பாடு!
சிறிலங்காவில் நடைபெற்ற வன்முறை சம்பவங்களின் போது தனியார் பேருந்துகள் சில தீயிடப்பட்டன.
வன்முறையின்போது 50 பேருந்துகள் வரை எரியூட்டப்பட்டன. இது தொடர்பில் சிறிலங்கா காவல்துறையிடம் முறையிட்ட போதும் நியாயம் கிடைக்கவில்லை என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
இவ்வாறான நிலையில், பேருந்துகளுக்கான காப்பீட்டுத் தொகையோ இழப்பீடுகளோ கிடைக்கவில்லை என்று இலங்கையின் தனியார் பேருந்து உரிமையாளர்கள் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திடம் முறையிட்டுள்ளனர்.
பேருந்துகளுக்கு தீயிடப்பட்டமை தொடர்பில் ஐ.நாவில் முறைப்பாடு
கடந்த மே மாதம் 9ஆம் திகதி நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பேருந்துகள் எரிக்கப்பட்டமை தொடர்பிலேயே இவ்வாறு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
சிறிலங்கா காவல்துறையிடம் முறையிட்டபோதும் நியாயம் கிடைக்கவில்லை. இதனையடுத்தே சர்வதேசத்திடம் முறையிடவேண்டிய நிலை ஏற்பட்டது என்று தெரிவித்துள்ளார்.
இவ்வாறான நிலையிலேயே இந்த சம்பவங்கள் தொடர்பில் பக்காச்சார்பற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எழுத்து மூலம் சமர்ப்பிக்கப்பட்ட முறைப்பாடு
இது மிகவும் துரதிர்ஷ்டவசமான நிலை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் குறித்த விடயங்கள் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளதாகவும் தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

