நாடாளுமன்ற உயர் அதிகாரிகளின் வெளிநாட்டு பயணங்கள் தொடர்பில் விசாரணை ஆரம்பம்
முன்னாள் நாடாளுமன்ற உயர் அதிகாரிகளின் வெளிநாட்டு பயணங்கள் தொடர்பில் விசாரணை ஒன்று நடத்தப்படவுள்ளது.
இது குறித்த உத்தரவை சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன (Jagath Wickramarathne) பிறப்பித்துள்ளார்.
இதனடிப்படையில், 2000 ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை மேற்கொள்ளப்பட்ட பயணங்களை உள்ளடக்கியதாக குறித்த விசாரணை முன்னெடுக்கப்படவுள்ளது.
உயர் அதிகாரிகள்
சில உயர் அதிகாரிகள் ஒரே மாதத்தில் மூன்று முறை வெளிநாடு பயணித்திருந்த சம்பவங்களும், அவர்கள் கலந்து கொண்ட வேலைத்திட்டங்கள் மற்றும் மாநாடுகளின் தொடர்பும் இந்த விசாரணையின் கீழ் பரிசீலிக்கப்படவுள்ளது.
சில பயணங்கள் அங்கீகரிக்கப்படாத வகையில் மேற்கொள்ளப்பட்டு, அரசின் பொது நிதிகளில் பல மில்லியன் ரூபாய்கள் செலவிடப்பட்டுள்ளன என சபாநாயகரின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
விசாரணையின் அறிக்கை
இந்த விசாரணையின் அறிக்கை அடுத்த மாதம் சபாநாயகரிடம் சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதற்கிடையில், அமைச்சரவை ஆணைக்குழுவின் செயலராக இருந்த தம்மிக்க தசநாயக்க (Dhammika Dasanayake) தமது பதவி விலகியுள்ளார்.
இதன்படி, இவரின் பதவி விலகல் நாளைமுதல் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கிப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
