போராட்டக்காரர்களுக்கு அமெரிக்க தூதுவர் விடுத்துள்ள வலியுறுத்தல்!
வன்முறை ஒரு போதும் தீர்வாக அமையாது எனவும் போராட்டம் நடத்தப் போகிறீர்கள் என்றால், அமைதியான முறையில் போராட்டத்தை நடத்துமாறும் சிறிலங்காவிற்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.
டுவிட்டர் பதிவினூடாக அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அமைதியான எதிர்ப்பாளர்களுக்கு இடம் மற்றும் பாதுகாப்பை வழங்குமாறு சிறிலங்கா இராணுவம் மற்றும் காவல்துறையினருக்கு நினைவூட்டுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
குழப்பமும் பலமும் பொருளாதாரத்தை சரி செய்யாது அல்லது இலங்கையர்களுக்கு தற்போது தேவையான அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Violence is not an answer. If you are going to protest, please do so peacefully. And reminding military & police to grant peaceful protesters the space and security to do so. Chaos & force will not fix the economy or bring the political stability that Sri Lankans need right now.
— Ambassador Julie Chung (@USAmbSL) July 8, 2022