மாற்றப்படவுள்ள தொடருந்து நேர அட்டவணை - வெளியாகிய அறிவித்தல்
By Dharu
தொடருந்து கால அட்டவணையை முழுமையாக மாற்றுவதற்கு தீர்மானிக்கப்படவுள்ளது.
தொடருந்து கால அட்டவணையை முழுமையாக மாற்றம் செய்தல் தொடர்பான தீர்மானங்கள் குறித்து நாளை (21) இறுதி முடிவு எடுக்கப்படும் என தொடருந்து சேவை பிரிவின் பொது முகாமையாளர் டபிள்யூ. டி. எஸ். குணசிங்க தெரிவித்துள்ளார்.
தொடருந்து பாதைகள் பழுதடைந்துள்ளமையினால் வேகக்கட்டுப்பாடுகளை விதித்து தொடருந்து தாமதங்கள் தொடர்பில் கவனம் செலுத்தி கரையோர தொடருந்து பாதையின் நேர அட்டவணை மாற்றப்பட்டதுடன் ஏனைய பாதைகளின் நேரங்களும் அவ்வாறே மாற்றப்படும் என குணசிங்க மேலும் தெரிவித்தார்.
