இலங்கையில் வயதானவர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்
இலங்கையின் வயது வந்தோர் மக்கள் தொகையில் சுமார் 30% பேர் மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மனநல ஆலோசகர் மருத்துவர் மதுஷானி டயஸ் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்டவர்களில் கணிசமான பகுதியினர் 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் என்று அவர் குறிப்பிட்டார்.
வயதானவர்களிடையே மனநலப் பிரச்சினைகள்
இலங்கையில் முதியோர் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதாகவும், வயதானவர்களிடையே மனநலப் பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வு குறைவாகவே இருப்பதாகவும் மருத்துவர் டயஸ் மேலும் தெரிவித்தார்.

தேசிய மனநல காப்பகத்தில் 1999 ஆம் ஆண்டு முதியவர்களுக்கென விசேட பிரிவு ஒன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது அங்கு ஆண்கள் மற்றும் பெண்களுக்கான இரண்டு தங்கியிருந்து சிகிச்சை பெறும் விடுதிகள் உள்ளதாகவும், அண்மையில் 'தீகாயு' எனும் பெயரில் பகல்நேர சிகிச்சை நிலையம் ஒன்று உளச்சிகிச்சை மற்றும் நடத்தை முறைகள் மூலம் மருத்துவ ஆலோசனைகளை வழங்க ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |