மீண்டும் எரிபொருளுக்குத் தட்டுப்பாடா - செயலிழக்கப்படுமா சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையம்!
சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் சிறிய தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த மூன்று மாதங்களுக்கு பின்னர் சுத்திகரிப்பு நிலையம் மீண்டும் இன்றைய தினம் செயற்படுத்தப்பட்டதன் பின்னரே இந்த பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சனா விஜேசேகர தெரிவித்துள்ளார்.
சீராக்கும் நடவடிக்கை
எவ்வாறாயினும், இப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு CPC தொழில்நுட்ப ஊழியர்கள் பணியாற்றி வருவதாக அமைச்சர் குறிப்பிடுகிறார்.
Update - A minor technical issue has been reported at the Sapugaskanda Oil Refinery. CPC technical staff working to fix the issue to restart the refinery which has been non operational for the last 3 months.
— Kanchana Wijesekera (@kanchana_wij) May 30, 2022
சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையம் இன்று முதல் செயற்படத் தொடங்கியதால், எரிபொருள் தட்டுப்பாடு நீங்கும் இதன்மூலம் நாளாந்தம் 600 முதல் 800 மெற்றிக் தொன் மண்ணெண்ணெய் மற்றும் விமானத்திற்கான எரிபொருளை உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
டீசல் உற்பத்தி
அதுமட்டுமன்றி அடுத்த டீசல் கப்பல் இலங்கைக்கு வருவதற்கு முன்னர் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து டீசல் உற்பத்தி செய்ய முடியும் எனவும் எரிசக்தி அமைச்சர் தெரிவித்திருந்தார்.
இவ்வாறான நிலையிலேயே இன்று தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
