தமிழினத்தை மட்டுமல்லாது நாட்டையே அழித்த ராஜபக்சாக்களை காப்பாற்றும் செயற்பாட்டில் ரணில்!

United Nations Ranil Wickremesinghe Selvam Adaikalanathan Sri Lanka President of Sri lanka
By Kalaimathy Sep 06, 2022 07:01 AM GMT
Report

தமிழ் மக்களை, தமிழ் இனத்தை, மட்டுமல்லாது, இலங்கை நாட்டையே குட்டிச்சுவராக்கிய மகிந்த குடும்பத்தை காப்பாற்றுகின்ற செயற்பாட்டடில் தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்க ஈடுபட்டுள்ளதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

மேலும் ஜனநாயக நீரோட்டத்திலே இந்த குடும்பத்திற்கு எதிராக போராடியவர்களை பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணைக்குட்படுத்துவது என்பது உண்மையிலே அந்த குடும்பத்தை காப்பாற்றுகின்ற ஒரு செயற்பாடாகத்தான் காணக்கூடியதாக இருக்கின்றது எனவும் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில், 

“சிறிலங்காவின் அதிபராக இருக்கின்ற ரணில் விக்ரமசிங்க ஐ.நா சபையிலே கூறி வந்த கூற்றுக்கு மாறாக செயற்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

இதேவேளை, நல்லாட்சி அரசாங்கத்தில் பிரதமராக இருந்த போது, ஐ.நா சபையிடம் பல கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்திருந்தார்.

அதிபரானதும் கொடுத்த வாக்குறுதியை மறந்த ரணில்


அதிலே ஒன்று பயங்கரவாத தடை சட்டத்தை நீக்குவதாக கூறியிருந்தார். அதே பிரதமர் இப்போது அதிபராக வந்திருக்கின்ற சூழலிலே அவர் கொடுத்த வாக்குறுதி என்பது மறுக்கப்பட்டிருக்கிறது.

மீண்டும் பயங்கரவாத தடை சட்டத்தை கையில் எடுத்திருக்கிறார். ஆகவே ஐ.நாக்கு ஒன்று கூறுவதும், வெளியே ஒன்றை செய்வதுமாக இருக்கின்ற சூழலை நாங்கள் பார்க்கக்கூடியதாக இருக்கிறது.

தேசிய பாதுகாப்பு சட்டம் என்பதும், பயங்கரவாத தடைச்சட்டமும் ஒன்றாகத்தான் இருக்கும் என்று கூறுவதைவிட மோசமாக இருக்கும் என்று நான் கருதுகிறேன்.

ஐ.நாவுக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்

தமிழினத்தை மட்டுமல்லாது நாட்டையே அழித்த ராஜபக்சாக்களை காப்பாற்றும் செயற்பாட்டில் ரணில்! | Sri Lanka Tna Adaikalanathan Un Ranil Pta Rule

ஆகவே பிரதமராக இருந்து அதிபராக வந்த ரணில் விக்ரமசிங்க ஐ.நா சபையிலே கூறி வந்த அந்த கூற்றை இப்போது மறுத்து நடக்கின்ற செயற்பாட்டை அவர் செய்து வருவதை ஏற்றுக்கொள்ள முடியாது. கூறிய வார்த்தை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

என்னை பொறுத்தமட்டிலே சட்டங்கள் மாறுகின்றன. எல்லாம் பயங்கரவாத தடை சட்டத்தின் அடிப்படையாகத்தான் வரும் என்பது என்னுடைய கருத்து. ஆகவே இது தொடர்பில் ரணில் மீள் பரிசீலனை செய்ய வேண்டும்.

ஐ.நாவுக்கு கொடுத்த வாக்குறுதியை, சந்தர்ப்பத்தை ரணில் நிறைவேற்றிகொள்ள வேண்டும் என்று அவர்களிடம் கோரிக்கை வைக்கின்றேன்.

அதை விட ஏற்கனவே ராஜபக்ச குடும்பத்தை ரணில் பாதுகாக்கின்றார் என அவர் மீது குற்றச்சாட்டு இருக்கிறது.

நியாயமான கோரிக்கைக்காக போராடியவர்களை கைது செய்வது சந்தேகத்திற்கிடமானது

தமிழினத்தை மட்டுமல்லாது நாட்டையே அழித்த ராஜபக்சாக்களை காப்பாற்றும் செயற்பாட்டில் ரணில்! | Sri Lanka Tna Adaikalanathan Un Ranil Pta Rule

மக்கள் ராஜபக்ச குடும்பத்துக்கு எதிராகத்தான் போராடினார்கள். பல்கலைக்கழக மாணவர்கள் கூட அந்த குடும்பத்துக்கு எதிராகத்தான் போராடினார்கள். தற்போது அதிபராக ரணில் வந்திருக்கிறார் என்றால் அந்த போராட்டத்தின் பின்னணிதான்.

ஆகவே ராஜபக்ச குடும்பத்தை எதிர்க்கின்ற வகையிலே தான் இந்த போராட்டம் இருந்தது. ஆனால் இப்போது சட்டங்களின் ஊடாக போராடியவர்களை கைது செய்து சிறையிலே அடைப்பது என்பது ராஜபக்ச குடும்பத்தை காப்பாற்றுகின்ற ஒரு செயற்பாட்டை  செய்ய ரணில் துணிகிறார் என்ற ஒரு சந்தேகம் எங்களுக்கு எழுகிறது.

அந்த வகையிலே இந்த விடயத்திலே மக்களுடைய ஜனநாயக போராட்டத்தின் ஊடாக தான் ரணில் விக்ரமசிங்க அதிபராக வந்தார். ஆகவே அந்த விடயத்தை கவனத்தில் எடுக்க வேண்டும் என்பதனை கூறி கொள்ள விரும்புகிறேன்” எனவும் தெரிவித்துள்ளார்.

ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026