இந்தியா மற்றும் இலங்கை இடையே ஆரம்பிக்கப்படவுள்ள உத்தேச கப்பல் சேவை!
Jaffna
Sri Lanka
India
Northern Province of Sri Lanka
By pavan
இந்தியா மற்றும் இலங்கை இடையே உத்தேச கப்பல் சேவை இந்த ஆண்டு ஆரம்பிக்கப்படும் என புதுச்சேரி முதல்வர் என்.ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
மாநில பேரவை ஒன்றில் கருத்துரைக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தின் காரைக்கால் துறைமுகத்துக்கும் யாழ்ப்பாணத்தின் காங்கேசன்துறை துறைமுகத்துக்கும் இடையே படகு சேவையை இந்த ஆண்டு ஆரம்பிக்க இந்திய அரசாங்கம் எதிர்பார்ப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
விண்ணப்பங்கள் கோரிக்கை
அதேவேளை புதுச்சேரி துறைமுகத்தில் பயணிகள் மற்றும் சரக்குக் கப்பலை இயக்குவதற்கும், பிற தொடர்புடைய நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கும் நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

