உணவுப் பொருட்களின் விலையேற்றம்: முதல் 10 இடங்களில் இலங்கை..! உலக வங்கி எச்சரிக்கை
விலையேற்றம்
உணவுப் பொருட்களின் விலையேற்றம் அதிகம் உள்ள நாடுகளின் முதல் 10 இடங்களில் இலங்கையையும் உலக வங்கி சேர்த்துள்ளது.
உலக வங்கியின் அண்மைய மதிப்பீட்டில், உணவுப் பொருட்களின் விலையேற்றம் அதிகமாக உள்ள நாடுகளில் இலங்கை ஐந்தாவது இடத்தில் உள்ளது.
லெபனான், ஸிம்பாப்வே, வெனிசுலா மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் தரவரிசையில் இலங்கையை விட முன்னால் உள்ளன. உணவுப் பொருட்களின் விலை உயர்வானது உலகளாவிய நெருக்கடியைத் தூண்டிவிட்டுள்ளது.
உலக வங்கி எச்சரிக்கை
இது மில்லியன் கணக்கான மக்களைக் கடுமையான வறுமையில் தள்ளும், பசி மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாட்டைப் பெரிதாக்கும். அத்துடன் ஆதாயங்களை அழித்து விடும் என்றும் உலக வங்கி எச்சரித்துள்ளது.
உக்ரைனில் போர், விநியோகச் சங்கிலி சீர்குலைவுகள் மற்றும் COVID-19 தொற்றுநோயின் தொடர்ச்சியான பொருளாதார வீழ்ச்சி ஆகியவை பல ஆண்டுகால வளர்ச்சி ஆதாயங்களை மாற்றியுள்ளன.
அத்துடன் உணவு விலையை எப்போதும் இல்லாத அளவிற்கு
உயர்த்தியுள்ளன.
இந்தநிலையில் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பை அதிகரிப்பதற்கும்,
அபாயங்களைக் குறைப்பதற்கும், குறுகிய கால மற்றும் நீண்ட கால, திட்டங்களை
நடைமுறைப்படுத்தி வருவதாக உலக வங்கி கூறியுள்ளது.